சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,995 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,67,430 -ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மாவட்டம் வாரியாக தொற்று பாதிப்பு குறித்த பட்டியலையும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று 5,764 பேர்டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை 3,07,677 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 6,340- ஆக உயர்ந்துள்ளது. இன்று பலியானவர்களில் 8 பேர் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 1,282 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,757 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 69.99% ஆக உள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 139 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தமிழகத்தில், 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 40,62,943 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 32 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74,344 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டது.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,21,753 ஆண்கள், 1,45,648 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம்
பீகார்- 03, கர்நாடகா – 04, தெலுங்கானா – 04, ஆந்திரப்பிரதேசம் – 04, டெல்லி – 01, உத்தரபிரதேசம் – 05, கேரளா – 04, மேற்குவங்கம் – 01, புதுச்சேரி – 01
வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;
சவூதி அரேபியா – 03, ஐக்கிய அரபு நாடுகள் – 01 மலேஷியா – 01