சிம்ம ராசி

simham

இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். தடைப்பட்டு வந்த திருமணம், தடை இல்லாமல் நடக்கும். தனஸ்தானத்தில் இராகு இருக்கின்ற காரணத்தால், குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். மற்றவர்கள் பாராட்டும் படி சாதனை படைப்பீர்கள். சுகஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதன் காரணத்தால், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 6-ஆம் இடத்தில் புதன் உள்ளார். கடன் பிரச்னை சற்று இருக்கலாம். தேவை இல்லாமல் விரோதம் வளர்க்க வேண்டாம். பரபரப்பு அவசரம் கூடாது.

காரணம், இந்த தன்மைகளை புதன் உருவாக்குவார். ஆகவே கவனம் தேவை.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வணங்குங்கள். சனிக்கிழமையில் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கல்கண்டு படைத்து வணங்கி, அந்த பிரசாதத்தை சாப்பிடுங்கள். முடிந்தளவில் தயிர் சாதத்தையும் படையுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உருவாகும்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்