கடக ராசி

இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் சுபிட்சமான செலவுகள் ஏற்படும். கடன் சுமை தீரும். புதிய தொழில் உருவாகும். எதிர்பார்த்த நற்காரியங்கள் நிறைவடையும்.

சுகஸ்தானஸ்தில் செவ்வாய் உள்ளார். வாகன விஷயங்களில் செலவுகள் வரலாம். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பஞ்சமஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமையப்பெற்றுள்ளதால், கவலையே வேண்டாம். வழக்கு பிரச்னை அனைத்தும் பஞ்சு போல் பறந்து விடும். பணம் தாராளமாக வந்தடையும். பாக்கிய ஸ்தானத்தில் ஞானகாரகனான கேது அமையப்பெற்றுள்ளார். குலதெய்வம் அருளால் நன்மைகள் தேடி வரும்.

6-ஆம் இடத்தில் குடும்பாதிபதியான சூரியன் இருப்பதால், யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்கும் வேலை வேண்டாம். மற்றபடி இந்த 2016-ஆம் ஆண்டில் உங்கள் குலதெய்வத்தின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : உங்கள் குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், குங்கும அர்ச்சனையும் செய்து, வஸ்திரம் அணிவியுங்கள். முடிந்தால் பொங்கல் வைத்து வழிபடுங்கள். குலதெய்வத்தின் அருளால் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.

ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்