திருவனந்தபுரம்:
கேரளாவில் இன்று (மார்ச் 13) புதிதாக1,984 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் இன்று அம்மாநிலத்தில் 1,984- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 158- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 73 ஆயிரத்து 343- ஆக உள்ளது.

கொரோனா தொற்றை கண்டறிய 53 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 17- பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.