a
புதுச்சேரியில்  தனித்துப்போட்டியிடும் அ.தி.மு.க., அங்குள்ள  30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்து முடிவின் படி புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. மண்ணாடிப்பட்டு: எம். மகாதேவி (மாநில கழக இணை செயலாளர்).
2. திருபுவனை (தனி): ஜி. சபாபதி (மதகடிப்பட்டு),
3. ஊசுடு (தனி): ஏ.கே-. செல்வராசு (கோரிமேடு),
4. மங்களம்: கே. நடராசன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்),
5. வில்லியனூர்: வி. ராஜாமணி (எ) சுப்ரமணியன் (ஊசுடு தொகுதிச் செயலாளர்)
6. உழவர்கரை: எம். சிவசங்கர் (ரெட்டியார் பாளையம்)
7. கதிர்காமம் : எம்.ஆர். கோவிந்தன் (மேட்டுப்பாளையம்)
8. இந்திரா நகர்: டி.குணசேகரன், (மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்)
9. தட்டாஞ்சாவடி: எஸ்.காசிநாதன் (மாநிலக் கழக இணைச் செயலாளர்)
10. காமராஜ் நகர்: பி. கணேசன் (மாநிலக் கழக துணைச் செயலாளர்)
11. லாஸ்பேட்டை: அன்பானந்தம் (உழவர் கரை கழகச் செயலாளர்)
12. காலாப்பட்டு: கா.லிங்கம் (எ) ஏழுமலை (பாரதி நகர்)
13. முத்தியால்பேட்டை: வையாபுரி மணிகண்டன், (முத்தியால் பேட்டை)
14. ராஜ்பவன்: பி.கண்ணன் (மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)
15. உப்பளம்: அன்பழகன் எம்.எல்.ஏ. (கழக முன்னாள் செயலாளர்)
16. உருளையன்பேட்டை: ஏ.ரவீந்திரன் (நகரச் கழகச் செயலாளர்)
17. நெல்லித்தோப்பு : ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ. (மாநில ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர்)
18. முதலியார் பேட்டை: ஏ.பாஸ்கர் எம்.எல்.ஏ. (எம்.ஜி-.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)
19. அரியாங்குப்பம்: டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
20. மணவெளி: பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. (மாநில கழக் செயலாளர்)
21. ஏம்பலம் (தனி): கோ.கோவிந்தராசு (கிருமாம்பாக்கம் பேட்)
22. நெட்டப்பாக்கம் (தனி): எல். பெரியசாமி எம்.எல்.ஏ. (புதுச்சேரி மாநிலக் கழக துணைச் செயலாளர்)
23. பாகூர்: பா.வேல் முருகன் (பாகூர் கொம்யூன்)
24. நெடுங்காடு (தனி): பன்னீர் செல்வம் (நெடுங்காடு)
25. திருநள்ளார்: அசனா (காரைக்கால் மாவட்டக் கழக துணைச் செயலாளர்)
26. காரைக்கால் வடக்கு : எம்.வி.ஓமலிங்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
27. காரைக்கால் தெற்கு: வி.கே. கணபதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
28. நிரவி – திருப்பட்டினம்: வி.எம்.சி. சிவக்குமார் எம்.எல்.ஏ.
29. மாஹே : எஸ்.பாஸ்கர் (மாஹே)
30. ஏனாம் : மஞ்சல சத்திய சாய்குமார் (ஏனாம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்)”
– இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.