கொழும்பு:

இலங்கையில் 20 மாவட்டங்களில் 20-ம் தேதி முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மண் அரிப்பு காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

72 மணி நேரத்துக்கு தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 மாவட்டங்களை சேர்ந்த 1.30 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு 231 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இது வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான ஒருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.