
ஹனோய்: சீனாவின் ஆதரவுபெற்ற பிராந்திய விரிவு பொருளாதார கூட்டாளர்(ஆர்சிஇபி) வணிக ஒப்பந்தத்தில், மொத்தம் 15 ஆசிய நாடுகள் இணைந்துள்ளன.
இதன்மூலம், உலகின் பெரிய தடையற்ற-வர்த்தக கூட்டமைப்பாக இந்த அமைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது, சீனாவுக்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், தனது நிலையை அந்நாடு வலுப்படுத்திக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதானது, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ஒபாமா உருவாக்கிய குழுவிலிருந்து தற்போதைய அதிபர் டிரம்ப் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, தெற்காசியப் பிராந்தியத்தில் தனது பொருளாதார நிலையை வலுப்படுத்திக் கொள்வதுடன், ஜப்பான் மற்றும் கொரிய நாடுகளுடனும் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]