சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று 1259 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 163 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மாநிலத்திலேயே அதிக பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.‘
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவரிமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை 26,83,396 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 35,853 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் சிகிச்சையின் காரணமாக, இதுவரை 26,32,092 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 15,451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று மேலும் 163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,52,284 பேர் ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு 8,517 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,41,942 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.