க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 28.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களில், 51 மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 185.1 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் மதுரா மாவட்டத்தில் தொடர் மழையால் 31 வீடுகள் பகுதியளவில் இடிந்து விழுந்தன. உத்தரப்பிரதேசம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி மைன்புரியில் 5 பேரும், மதுராவில் 2 பேரும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்ததுள்ளனர்.

அண்மையில் பெய்த மழையைக் கருத்தில் கொண்டு, அதிக மழை பெய்யும் மாவட்டங்களை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.