மேட்டூர்: டெல்லி விவசாயிகளின் வாழ்வாதாரமான மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பிய நிலையில், அணையில்  இருந்து பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர்திறந்து விடப்படுகிறது. இதனால்,  டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவினை எட்டியுள்ள நிலையில், காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நிரப்பும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் மேட்டூர், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கும் செயல்பாட்டினை சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக  2024ம் ஆண்டு 3வது முறையாக 120 அடியை எட்டியது.  மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று (31.12.2024) இன்று மாலை  எட்டியது. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது.

ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரில் ‘மேட்டூர் அணை’  நீர்த்தேக்கம் மூலம்  சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

தற்போது அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ள நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக பாசன தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி,  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு  உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவினை எட்டியுள்ள நிலையில், காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நிரப்பும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் மேட்டூர், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கும் செயல்பாட்டினை சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், மேட்டூர் அணையின் வெள்ள நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ.673.88 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 120 அடியினை எட்டும் பொழுது அணையின் இடது கரையின் நீர் பரப்பு பகுதியிலிருந்து வெள்ள நீரை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலமாக 82 ஏரிகள், குளங்களுக்கு நீர் சென்றடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சுமார் 70 முதல் 80 சதவிகித ஏரிகளுக்கு நீர்நிரப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,06116 ஏக்கர் நிலங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த 31.07.2024 முதல் மூன்று நீரேற்று நிலையங்களிலும் உள்ள 27 மின் மோட்டார்கள் மற்றும் பம்புகளுக்கான சோதனை ஓட்டத்தின் மூலம் 40 ஏரிகளுக்கு 267 மில்லியன் கன அடி நீர் நீரேற்றம் செய்யப்பட்டு 2,300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. இதன்மூலம் விவசாயப் பயன்பாடு மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது என கூறினார்.