பெங்களூரு:
இன்று நடைபெற உள்ள சட்டமன்ற வாக்கெடுப்பில் 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களை மட்டுமே பெற்று, பெரும்பான்மை இல்லாத நிலையில் முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா, பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டமன்றம் கூடுகிறது. அதைத்தொடர்ந்த மாலை 4 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது
இந்நிலையில், இன்று காலை தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகு விடுதிக்கு சென்ற எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்று மாலை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், 100% நான் முழுமையான பெரும்பான்மை பெற போகிறேன் என்று கூறினார்.
மேலும், நாளை முதல் நான் கர்நாடக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கப் போகிறேன் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
அதுபோல மத்திய அமைச்சரான அனந்தகுமார் கூறும்போது, காங்கிரஸ் மற்றும் ஜே.டி. (எஸ்) ஆகிய இருவரும் ஒரு புனிதமற்ற கூட்டணியை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள், மக்கள் அவர்களை நிராகரிக்கப் போகிறார்கள் என்று கூறினார்.
நாங்கள் வெற்றி பெறப்போகிறோம் என்று முன்னாள் பாஜ அமைச்சரான சதானந்தகவுடா கூறி உள்ளார்.