பிர்தாம், சத்தீஸ்கர்

ரு திருமண நிகழ்வுக்கு வந்திருந்த 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கல்லால் தலையை சிதைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கபிர்தாம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூரில் திருமண விழா ஒன்று நடைபெற்றுள்ளது.   அந்த விழாவில் மணமகளின் சொந்தங்களில் ஒருவராக ஒரு 10 வயதுச் சிறுமி கலந்துக் கொண்டுள்ளார்.   திருமண ஊர்வலம் முடிந்த பிறகு அந்த சிறுமியைக் காணவில்லை.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.    காவல்துறையினர் விசாரித்ததில் மணப்பெண் வீட்டாருக்கு நன்பரான உத்தம் சாகு என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.   அவரை மேலும் விசாரித்ததில்  அவர் அந்த சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளர்.

அவர், “திருமணம் நடைபெறும் போதே யாருக்கும் தெரியாமல் நான் அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தேன்.  அந்தச் சிறுமி என்னைக் காட்டிக் கொடுக்கலாம் என்னும் பயத்தில் அவள் தலையை அருகில் இருந்த பாராங்கல்லில் பல முறை மோதி கொன்றேன்.   அதன் பிறகு அந்தப் பிணத்தை அருகில் இருந்த ஒரு நதிக்கரையில் மறைத்தேன்”  என தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் அவர் கூறிய அந்த நதிக்கரையில் தலை சிதைக்கப்பட்ட சிறுமியின் உடலை கண்டெடுத்துள்ளனர்.    உத்தம் சாகுவை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இது போல பயங்கரமான செய்திகளை வெளியிட பத்திரிகை.காம் சிறிதும் விரும்புவதில்லை.   ஆனால் செய்தி என்னும் காரணத்தினால் இதை வெளியிடுகிறது.    இது போல செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை.காம் தனது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.