டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10%  இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10சதவீதம் வழங்கி மத்தியஅரசு அறிவித்தது. அதற்கான அரசாணை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து நடப்பாண்டே இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.

இதற்கு மற்ற வகுப்பினரிடையயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, வழக்கின் கடந்த அப்டோபர் மாதம் 21ந்தேதி நடைபெற்ற  விசாரரைணையின்போது,  பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10சதவீத இடஒதுக்கீடு, மற்றும் 8 லட்சம் ரூபாய் என்ற  வருமான அளவுகோல் ஆகியவை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது கேள்வியெழுப் பியதோடு, அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில்,பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு சின்கா கமிட்டி உத்தரவின் அடிப்படையில்தான்  10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு மற்றும் 8 லட்சம் என்ற வருமான உச்சவரம்பு அளவுகோல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதனால் ஓபிசி இட ஒதுக்கீட்டோடு இதனை ஒப்பிட்டு பார்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது. மேலும் “Creamy layer”-க்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறதோ அதன் அடிப்படியில் தான் 8லட்சம் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது.  இந்த கூடுதல் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகைகள் என்பது 8 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் உள்ள உயர் வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு கொடுக்க முடியாது என்றும் கூறியதுடன், மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் அவர்களது கோரிக்கையை நிராகரித்து அதை  தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் ஒருசில நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.