மும்பை
பிரபல தமிழ் நடிகை ஸ்ருதிகா இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியி பங்கேற்றுள்ளார்.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 18வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியில், சல்மான் கான் பல சீசன்களை தொகுத்து வழங்கி இருக்கிறார். தமிழ் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் பிரபலம் ஆனார். இவர் மறைந்த மூத்த நடிகர், தேங்கா ஸ்ரீநிவாசனின் பேத்தியாவார்.
இவர், முதன்முதலில் நடித்த ஸ்ரீ படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதில் அவர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து மாதவனுடன் நளதமயந்தி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தித்திக்குதே படத்திலும் துணை கதாப்பாத்திரமாக வந்தார். பின்னர் திரையுலகை விட்டு விலகினார்.
இவர் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து. வெளிநாட்டிற்கும் அழகுசாதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறார்.
ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன ஸ்ருதிலாவுக்கு ஏராஅமாக ரசிகர்கள் கூடிஅதால்தனியாக சமையல் நிகழ்ச்சியையும் தொடங்கி, அதிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். தற்போது, இந்தி பிக்பாஸிற்குள் நுழையும், முதல் தென்னிந்திய தமிழ் பெண்ணாக உள்ளார்..
நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்வில், கலந்து கொண்ட ஸ்ருதிகா அவரை “வணக்கம்” தெரிவிக்க சொல்லி மகிழ்ச்சி அடைந்தார். ரசிகர்கள் இந்தி சின்னத்திரை உலகிற்குள் நுழைந்துள்ள ஸ்ருதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.