டியோகர்

பயணிகள் ரயில் ஒன்றில் லாரி மோதியதால் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

                                                                                             Sample picture

பயணிகள் ரயில் ஒன்று பீகார் மாநிலத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு புறப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் அருகே  சென்று கொண்டிருந்தது. ரயில் சங்கர்பூர் ரெயில் நிலையம் அருகே சென்றபோது சாலைக்கு குறுக்கே இருந்த ரயில்வே கேட் மூடப்பட்டது.

அதே நேரம் சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே கேட்டை உடைத்து தள்ளிவிட்டு ரயில் மீது வேகமாக மோதியது.  ரயில் மீது லாரி மோதிய வேகத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு என்ஜின் பெட்டி உள்பட 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின.

யாருக்கும் இந்த விபத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.