r

மிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்திய  பிரதமர் மோடியின் விளம்பர மோகம் அளவில் பரவிவிட்டது. மழை வெள்ள பாதிப்பில் விளம்பரம் தேடும் பிரதமர் மோடிக்கும், ஜெயலலிதா ஆகியோரது செயல் மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக பிரபல  செய்தி நிறுவமனமான ராய்டர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியாவது:

”இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ள ஜெயலலிதா தான் ஆட்சி செய்யும் மாநிலத்தின் தலைநகரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உடனடி நடவடிக்கையில் இறங்காதது அவரது புகழுக்கு இழுக்கை தேடி தந்துள்ளது. அதோடு அவசரமாக விமானத்தில் பறந்து வெள்ள பாதிப்பை பார்வையிட்டு திரும்பிய கையோடு, ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத்தை அறிவித்த பிரதமர் மோடியின் புகைப்படமும் சமூக வலை தளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகவிட்டது.

பிரதமரின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட கிராபிக்ஸ் புகைப்படங்கள் தான் இதற்கு காரணம். ஜெயலலிதா மற்றும் மோடியின் பத்திரிக்கை தொடர்பு அதிகாரிகளின் செயலால் சக்தி வாய்ந்த இரு தலைவர்களுக்கும்  இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், நிவாரண பொட்டலங்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் கட்டாயமாக இருக்க வேண்டும் என அவரது கட்சியினர் அராஜகம் செய்தது, மற்றும் அவருக்கு ஆதரவான ஜெயா பிளஸ் டிவியில் தொடர்ந்து “மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக” செய்தி வெளியிட்டு வருவது ஆகிய காரணங்களால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.. இதன் வெளிப்பாடாக தான் ஆத்திரமடைந்த ஆர்கே நகர் தெ £குதி இளைஞர்கள் சிலர் அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் விரட்டியடித்தனர். இது ஜெயலலிதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது இதன் பின்னர் தான் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒட்ட வலியுறுத்துவோர் மீது காவல் துறையில் புகார் செய்யலாம் என்று அதிமுக அறிவித்தது” என்று ராய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.