ஆடேனம், கேரளா
கேரள சினிமா இயக்குனர் அருண்வர்மா என்பவர் உடல் ரெயில் தண்டவாளத்தில் கிடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள வடக்கன்சேரியில் உள்ள அட்டாணி பகுதியை சேர்ந்த 27 வயஹ்து இளைஞர் அருண்வர்மா. இவர் கடந்த நான்கு வருடங்களாக மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறார். தற்போது அவர் தக் லைப் என்னும் மலையாள திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் ஜூலை மாதம் வெலியாக உள்ளது.
அருண் வர்மா சமீபத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்னும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகி பிரபல நடிகையான பிரியா வாரியர் ஆவார். கடந்த வியாழன் இரவு முதல் அருண்வர்மா காணாமல் போய் உள்ளார். இவரை இவரது குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி உள்ளனர். ஆனால் இவர் எங்கும் கிடைக்கவில்லை.
நேற்று காலை இவரது உடல் ஆடேனம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இது அந்த பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருண்வர்மா ரெயில் மோதி விபத்தில் இறந்திருக்கலாம் எனவும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஒரு சிலர் இது கொலையாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். காவல்துறையினர் இந்த மூன்று கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.