சீன தலைநகர் பெய்ஜிங்கில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்திருக்கிறது. பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, தொழில் துறையிலும் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. இதனால், அந்நாட்டு தலைநகர் பெய்ஜிங் உள்பட பல்வேறு தொழில் நகரங்களில் புகை மிக அதிக அளவில் வெளியேறுகிறது.
தவிர, வீடுகளில் குளிர் காய்வதற்காக நிலக்கரி எரிப்பது, வாகன புகை என்று பலவிதங்களில் காற்று மாசடைந்துள்ளது.
இந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு சீனா தலைவர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்களுக்காக, கனடா நாட்டிலுள்ள பான்ப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து சுத்தமான காற்றை பாட்டில் அடைத்து, கனடா நாட்டு தனியார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இதிலும் தரத்துக்கேற்ற விலைதான். லேக் லூயிஸ் மலையின் காற்று இந்திய மதிப்பின்படி ரூ.1,700-க்கு விற்பனையாகிறது. செய்யப்படுகிறது. பான்ப் மலையின் காற்று இதைவிட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இதைப்படித்தவுடன், நமக்கு ஆச்சரியமாகத் தோன்றாலாம். இப்படித்தான் வெளிநாடுகளில் பாட்டிலில் தண்ணீர் விற்றபோது நமது முந்தைய தலைமுறையினர் ஆச்சரியமாக நினைத்தார்கள். ஆனால் லிட்டருக்கு ஏற்ற மாதிரி காசு வைத்து விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.
அதே போல விரைவில் இங்கும் சுத்தமான காற்று விற்பனைக்கு வரலாம்.
நம் நாட்டின் தலைநகரான டில்லி மற்றும் சுற்றுப்புற பகுதியில் காற்று மிகவும் மாசடைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதையடுத்து ஒற்றப்படை எண்ணுள்ள வாகனங்கள் ஒருநாள், இரட்டைப்படை எண்ணுள்ள வாகனங்கள் மறுநாள் என்று பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு செய்ய வேண்டிய நிலை.
பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எரிவாயு பயன்படுத்துவதை அதிகரிப்பது, அனல் மின் நிலையங்களின் தேவையாக் குறைத்து சூரிய மின்சக்தி போன்ற மாற்று மின்சார உற்பத்தியை பெருக்குவது போன்றவற்றை செய்யாவிட்டால்.. டில்லியில் மட்டுமல்ல. சென்னை உட்பட பல இந்திய நகரங்களிம் நல்ல காற்றை காசுக்கு வாங்க வேண்டியதுதான்!