ரோடு

தேர்தல்  விதிகளை மீறியதாக நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மாதம் (பிப்ரவரி) 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.தேர்ர்தலில் தி.மு.க. வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வகையில் அவர் 2-ம் நாளான நேற்று முன்தினம் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பிரசாரத்தை தொடங்கி மரப்பாலம், கச்சேரி ரோடு, மண்டபம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை கூட்டங்களில் பேசி உள்ளார்.

ஈரோட்டில் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரே நாளில் தேர்தல் விதி மீறியதாக சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.