பெங்களூரு

ர்நாடகா மாநில சட்டசபை சபாநாயகராக யு டி காதர் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று அதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. அதில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, அதன் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

நேற்று புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த யு.டி. காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது., முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். யு.டி. காதருக்கு எதிராக யாரும் போட்டியிடாததால் அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று அவர் சபாநாயக.ராக பதவியேற்றுக்கொண்டார்.  சுமார் 54 வயதாகும் காதர், கர்நாடக சட்டப்பேரவையில் சபாநாயகராகும் முதல் இஸ்லாமியர் மற்றும் இரண்டாவது இளம் சபாநாயகர் ஆவார். முன்பு தேவே கவுடா முதல்வராக இருந்தபோது 43 வயதான ரமேஷ் குமார் சபாநாயகராகப் பொறுப்பேற்றார்.