டில்லி

ங்கி ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் பணிக் குறைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வங்கி நிர்வாகத்துக்கு வைத்துள்ளன.   ஆனால் நிர்வாகம் இந்த கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவில்லை என வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி வரும் 15 மற்றும் 16 அதாவது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.    ஏற்கனவே நாளை அதாவது இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இரு நாட்கள் விடுமுறை உள்ளன.

எனவே நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் இயங்காது என கூறப்படுகிறது.  இதனால் செக் கிளியரன்ஸ் உள்ளிட்ட  பல வங்கிப் பணிகள் பாதிக்கப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.   இதைப் போல் ஏடிஎம் சேவைகளும் செயலிழக்கலாம் எனவும் ஒரு சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்க உள்ளதாக அறிவித்துள்ளன.