டில்லி,

நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் 300 இடங்களை அமலாக்கத் துறை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சட்ட விரோதமாக பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக வந்த புகார்களை தொடர்ந்து அமலாக்கத்துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள  ஷெல் நிறுவனத்தின 100க்கும் மேற்பட்ட கிளைகளில் அமலாக்க துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட ஷெல் நிறுவன கிளைகள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் ஷெல் நிறுவனத்தின் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆய்வு வருகின்றனர்.

இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.