harper-lee
அமெரிக்காவில் (அலபாமாவில்) 1926ல் பிறந்த ஹார்பர் லீ, “டு கில் எ மாக்கிங் பெர்ட்” என்ற நாவலை, அமெரிக்க வெள்ளையின மக்களுக்கும் கருப்பர்களுக்கும் இடையே நடந்த இனப் போரை மையமாகக் கொண்டு எழுதிய கதை. அந்த நாவலில், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக அழகாகத் தீட்டியிருப்பார் ஹார்பர். ஒரு பத்து வயது பெண் குழந்தை கதையைச் சித்தரிப்பது போல அந்த கதை சொல்லப்பட்டிருக்கும். தன் வக்கீல் தந்தை, எப்படி குற்றம் சாட்டப்பட்ட ஒரு கருப்பு இன மனிதரை, தன் இன மக்களையும் எதிர்த்து தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறார் என்பதை தத்ரூபமாக கூறியிருப்பார்.
அந்தக் கதையில் ஒரு இடத்தில், “சில நேரங்களில் ஒரு மனிதனின் கையில் உள்ள பைபிள், மற்றொருவர் கையில் உள்ள ஒரு விஸ்கி பாட்டிலை விட தீங்களிக்கக்கூடியது … அவர்கள் அடுத்த (வின்) உலகத்தில் சிறப்பாக வாழ்வதைப் பற்றிய கவலையை மட்டும் கொண்டு, பூமியில் ஒற்றுமையாக வாழ மறுகின்றனர்.” என்ற ஒரு அரிய சிந்தனையை விதைத்திருப்பார் ஹார்பர்.
இந்த நாவல், 1961ல் புலிட்சர் பரிசு பெற்றது. பின்பு 1962ல் கிரகோரி பெக், அட்டிகஸ் பின்ச் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் சிறந்த பாராட்டு பெற்றார்.
இந்த ஒரு நாவலைத்தவிர, ஹார்பர் வேறு எந்தப் படைப்பையும் முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்பர் லீ இன்று அதிகாலை தூக்கத்தில் காலமானதாக அவர் குடும்பத்தினர் பத்திரிகைக்கு தெரியப்படுதியுள்ளனர்.