வைரமுத்து: திகைப்பும், அருவெறுப்பும்…

Must read

Vairamuthu

இதுவரை சிறுகதைகளே எழுதியிராதவைரமுத்து, வாரம் ஒன்று எனத் தொடர்ந்து 40 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இது  சாதாரண விஷயமில்லை. நிச்சயம் வியக்கவேண்டிய உழைப்பு.

ஆனால், அத்தொகுப்பு நூலைத் தமிழ்ப் படைப்பிலக்கிய உச்சம் என்ற ரேஞ்சுக்கு விளம்பரப்படுத்துவதுதான் கொஞ்சம் திகைப்பாகவும் அருவருப்பாகவும்கூட இருக்கிறது, ஆனால், நிச்சயம் ஆச்சர்யமாக இல்லை

Of course, நான் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை, படிக்கப்போவதில்லை, உரைநடைப் புனைவுகள் வாசிக்கிற ஆர்வமே குறைந்துவிட்டது.

வைரமுத்துவின் மரபுக்கவிதைகளும், சினிமாப் பாடல்களில் ஆங்காங்கே சர்வசாதாரணமாகத் தெறிக்கும் மொழி ஆளுமை/ சொல்தேர்வு brillianceம் எனக்கு ரொம்பப் பிடிக்கும், மற்றபடி அவருடைய பாணி எழுத்து எனக்குச் சிறிதும் உவப்பில்லாதது., ஆகவே, இந்த விமர்சனம் நூலுக்கானது அல்ல, Boldness of its/his marketing strategyபற்றியது.

மரபுக்கவிதையோ, புதுக்கவிதையோ, நாவலோ, கேள்விபதிலோ, சினிமா வசனமோ, இதுவரை வைரமுத்துவின் அணுகுமுறை ஒரேமாதிரிதான் இருந்தது, அதே பாணியில்தான் சிறுகதையும் எழுதியிருப்பார் என்பது என் ஊகம். நான் மிகவும் மதிக்கிற நான்கைந்து பேர் சிபாரிசு செய்தால் வாங்கிப் படித்துவிட்டுச் சொல்கிறேன்

 

175281_10150098772348292_2102980_oஎன். சொக்கன்    https://www.facebook.com/nchokkan?fref=ts

 

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article