விமானத்தில் பயணிகள் செய்யும் 10 சேட்டைகளின் பட்டியல் வெளியீடு

Must read

images (27)

வாஷிங்டன்:
விமான பயணத்தின் போது பயணிகள் அடிக்கடி செய்யும் 10 தவறுகள் எவை என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பஸ், ரயில் பயணங்களை விட விமான பயணங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சமயங்களில் மறக்க முடியாத அனுபவங்களையும் ஏற்படுத்திவிடும். அதேசமயம், விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்வது  முதல் அது முடியும் வரை பயணிகள் பல  பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏர்போர்ட்டில் வரிசையில் நிற்பது, கடுமையான பரிசோதனை, முறையான ஆவணங்களை அளிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை கடந்து தான் விமானத்தில் ஏறி உட்கார முடியும்.
சில சந்தர்ப்பங்களில் இது மகிழ்ச்சிகரமான பயணமாக மாறிவிடும். ஆனால் பல நேரங்களில் விமானத்தில் வரும் மற்ற  பயணிகள் மூலம் ஏற்படும்  மோசமான அனுபவங்கள் வாழ்நாளில் மறக்க முடியாமல் செய்துவிடும். வழக்கமாக விமானத்தில் பயணம் செய்வோர் செய்யும் 10 தவறுகள் என்ன என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதை இங்கே பார்ப்போம்…
1.ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து கொண்டு அருகில் இருக்கும் பயணிகளுக்கு இயற்கை காட்சியை மறைப்பவர்கள் 19% பேர்.
2. சத்தமாக பேசுவோர் 24% பேர்.
3.முன் சீட்டில் கால்களை தூக்கி வைப்பது 33% பேர்.
4. சீட்டில் இருந்து எழுந்து உடமைகளை அடிக்கடி சரிப்பார்ப்பது 34% பேர்.
5. ஆவண சரிபார்ப்புக்கு வரிசையில் முண்டியடிப்பது 40% பேர்.
6. சக பயணியுடன் இடைவிடாமல் பேசுவது 43% பேர்.
7. பெரிய அளவுள்ள உடமையை கையில் வைத்துக் கொண்டு மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்வோர் 49% பேர்.
8. விமான பணிப்பெண்களுக்கு நன்றி கூறாமல் இருப்போர் 53% பேர்.
9. இருக்கையில் கை பிடியை முழுமையாக ஆக்ரமிப்போர் 55% பேர்.
10. இருக்கையை பின்னோக்கி அதிகளவில் சாய்த்து பின்னால் இருக்கும் பயணிக்கு தொந்தரவு கொடுப்போர் 63% பேர்.
 ஆய்வில் தெரியவந்துள்ள இந்த தவறுகளை பயணிகள் எதிர்காலத்தில் திருத்திக் கொண்டால் ஆய்வுக்கு ஒரு மரியாதையும், சக பயணியையும் மகிழ்ச்சியடை செய்யலாம்.

More articles

Latest article