விஜயகாந்த் அணி என்று சொல்வதால் கவுரவ குறைச்சல் இல்லை : திருமாவளவன்

Must read

Thirumavalavan
தேமுதிக மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என்று வைகோ கூறினார். ஆனால், இக்கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில் இக்கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என்று சொல்லலாம். அப்படிச்சொல்வதால் கவுரவ குறைச்சல் ஒன்றும் இல்லை. தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என்று சொல்வதால் எங்களுக்கு கவுரவ குறைச்சல் இல்லை. தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி என்று சொல்வதால் விஜயகாந்துக்கும் கவுரவக்குறைச்சல் இல்லை’’ என்று தெரிவித்தார்.

More articles

Latest article