1
விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில்  தொண்டர்கள் பலியாகியிருக்கிறார்கள். 50 பேருக்கு மேல் மயக்கம் அடைந்திருக்கிறார்கள்.
இப்படி தலைவர்கள் பேசும் கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்டி வருவது என்பது காலம்காலமாக நடக்கிறது. பணத்துக்காக அழைத்துவரப்படும் அப்பாவி மக்கள், கடும் வெயிலில் பல மணிநேரம் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள்.
இதை அரசியல் கட்சியினர் மறுக்கக்கூடும். குறிப்பாக அ.தி.முகவினர் மறுப்பார்கள்.
ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் 2014 ஏப்ரலில் ஒரு சம்பவம் நடந்தது. ஜெயலலிதா கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு வர சாப்பாடு, தண்ணீர், ரூ.200 பணம்  தருவதாக சொன்ன நிர்வாகிகள் எதுவும் தரவில்லை என்று  650 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆக, அப்பாவி மக்களை மாடு போல, லாரிகளில் அடைத்து கூட்டத்துக்கு இழுத்துவருகிறாரகள், வெயிலில் காக்க வைக்கிறார்கள் என்பெதல்லாம் தலைவர்களுக்கு தெரியாததல்ல.
இப்படிப்பட்ட தலைவர்கள், மக்களை பலிவாங்குகிறார்கள் என்பதே உண்மை.
– சுந்தர்