5

மா

மியார் வீட்டுல ஒரு விஷேசம். திருநெல்வேலி போனேன். பக்கத்துல ஆலங்குளத்தில தே.மு.தி.க. கட்சி சார்பா, “மக்களுக்காக மக்கள் பணி”ங்கிற மீட்டிங். பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

அப்போ திடீர்னு,  “மக்களுக்கு தரமில்லாத மிக்சி கிரைண்டர் ஃபேன் என இலவசங்களை கொடுத்து ஆளுங்கட்சி ஏமாற்றி வருகிறது” ன்னு ஆவேசமா சொன்னார்.

உடனே கூட்டத்தில் பெண்கள் பகுதியில் இருந்து, “ஆமாம்! ஆமாம்!”னு குரல் வந்துச்சு. அதோட, “இன்னும் நிறைய பேருக்கு இலசவ பொருட்கள் கொடுக்கவே இல்லை”ன்னும் சிலபேரு குரல் கொடுத்தாங்க.

உடனே மேடைக்கு முன்னாடி இருந்த பத்திரிகையாளருங்களை பாத்து “கேமராவை   மக்கள் பக்கம் திருப்பி அவர்கள் சொல்றத படம் பிடிங்க. எங்கள் கட்சிக் கூட்டத்தில நடக்கிற கலை நிகழ்ச்சிய படம் பிடிச்சி,   விஜயகாந்த் கூட்டத்தில் குத்தாட்டம்னு எழுதறத நிறுத்துங்க”ன்னு காட்டமா சொன்னாரு பிரேமலதா.

“தே.மு.தி.க மேடைகளில் குத்தாட்டம்”னு சொல்றது  ஜெயா டிவி மட்டும்தான். இவரு ஏன் ஒட்டுமொத்தமா எல்லா பத்திரிகை, டிவிக்கள் மேலயும் ஆவேச படறாரு.. விஜயகாந்த மாதிரி இவரும் ஆகிட்டு வர்றாரோ!”னு கிலியோட பேசிக்கிட்டாங்க பத்திரிகையாளருங்க!