மீட்டிங்: ஸ்டாலின், விஜயகாந்த், வைகோவை வறுத்தெடுத்த காடுவெட்டி குரு!

Must read

0
ருமபுரி மாவட்டம் ஏலகிரியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில்  காடுவெட்டி குரு பேசினார்.  வழக்கமான அளவுக்கு இல்லையென்றாலும், டபுள் மீனிங் பேச்சு இல்லாமல் இல்லை. அதோடு விஜயகாந்தை துவைத்து எடுத்துவிட்டார்.
காடுவெட்டிகுரு பேசியதில் இருந்து:
“உங்க  கூட்டணியில  விஜயகாந்த் சேருவாரானு சில நாளுக்கு முன்னே கலைஞரை கேட்குறாங்க. அதுக்கு அவரு, பழம் கனிந்து கொண்டிருக்கிறது, ஓரிரு நாட்களில் பழம் கனிந்து பாலில் விழ இருக்கிறது.  நான் பால் சொம்போடு காத்திருக்கிறேன் அப்படின்னு சொன்னார். பழம் கனிஞ்சிச்சா.? பழம் கனிஞ்சி  பால்ல விழுந்துச்சா..?
அந்த பால் புளிச்சு போச்சுன்னு நான் ஏற்கெனவே சொல்லிட்டேன். அந்த பாலை வச்சுகிட்டு கூப்புட்டா, பழம் வராது. நல்ல ஃபாரின் சரக்க வச்சிகிட்டு கூப்பிட்டா  உடனே வந்துடும்.
எந்த நேரமும் நிதானம் இல்லாமல் குடிபோதையில் எதையோ உளறிக்கிட்டு இருக்கிற ஒரு  நடிகர் விஜயகாந்த்.  மேடைக்கு வரும்போதே தட்டுத்தடுமாறிதான் வர்றாரு. . அவரை ரெண்டு பேரு தாங்கிப்பிடிக்க வேண்டியிருக்கு.
அவரு ஒரு மாநாடு நடத்தினாரே.. அதில அவரு என்ன பேசினாருன்னு ஒருத்தனுக்கும் புரியல.  கிங்காக போறேன், கிங் மேக்கராக போறேன்னு கடைசியா சொன்னாரு. சில பேரு “இங்கீலிஸ் படம் கிங்காங்கை பார்த்திருப்பார்போல”னு கிண்டலடிச்சாங்க.
பொதுவாழ்க்கையில  இருக்கறதுக்கு  எந்த ஒரு  தகுதியும் இல்லாத நடிகர் விஜயகாந்த். அவர கூட்டணி சேர்க்க ஆளாளுக்கு போட்டிபோடுறாங்க. எவ்வளவு பெரிய வெட்கட்கேடு இது? தேர்தலுக்காக ஓட்டுக்காக எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்னு நினைக்கிறாங்க. அப்ப இவங்க தகுதி என்ன?
மக்கள் நலக்கூட்டணியில் உள்ளவங்க, தங்களோட  கூட்டணியை உடைக்கப் பார்க்குறாங்கனு புலம்பறாங்க.ய . அதை யார் உடைக்கப்போறா…? மேடையிலிருக்கும் போது கூட ஒருத்தருடைய கையை ஒருவர் இறுக்கமாக பிடிச்சிகிட்டே நிக்கிறாங்க.  ராத்திரி கூட  ஒரே ரூம்லதான் படுத்திருக்காங்கலாம். காலையில  எழுந்ததும் ஒன்னா்ததான்  வாக்கிங்க் போறாங்க.
நாங்க புரட்சி செய்யப்போகிறோம்னு  வைகோ முழங்குறாரு. இவரு கலைஞரை குறை சொல்லிப்பேசறதுக்கு தகுதி இருக்கா.  அவரும் அந்தக்கட்சியில் இருந்தவருதானே..  ஒரே குட்டையில  ஊறிய மட்டைங்கதான் ரெண்டு பேருமே. இதில வைகே வந்து என்ன செய்யப்போறார்..?
அடுதது இன்த ஸ்டாலினு.  ஆட்டோவில  போனாரு. டீ குடிச்சாரு    நெல்லைப்பார்த்து இது என்ன நெல்லானு விவசாயிகிட்ட  கேக்குறாரு.  வாழைமரத்த பாத்து இது என்ன மரம்ங்குறாரு.   பாவம்  அவருக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே இல்லை.
அந்த விவசாயிய பாத்து  கடைசியா நீங்க ஏன் கேவணம் கட்டியிருக்கீங்க.னு கேட்டாரு.  அதுக்கு அந்த விவசாயி  “உங்க ஆட்சியில இதுதான் மிச்சம் இதையும் உருவ வந்துட்டீங்களானு கேட்டாரு.
 

More articles

Latest article