malaikalam

 

“மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானது..” என்றொரு திரைப்பாடல் உண்டு. உண்மைதான். ஆனால் இந்த மழைக்காலத்தில நோய்கள் அதிகமாக பரவுகின்றன.   இந்த நோய்களில் இருந்து நம்மை தற்காத்துகொள்வது எப்படி.. டாக்டர் சரவணன் சொல்கிறார்:

சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடுகின்றன. நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான் இதற்கு முக்கிய காரணம்.

அதுவும் இந்த சீசனில், மருத்துமனைகளில் கூட்டம் குவிந்துகொண்டிருக்கிறது.

இந்த மழைக்காலத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன, அவற்றை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

இருமல் ஜலதோசம்:

காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் நேரம் இது. இந்த குளிர்ச்சியான சூழல் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகவே சளி மற்றும் இருமல் பிரச்னைகளால்  அவதிப்படுவார்கள். இன்ஃப்ளூயன்சா என்ற வைரஸ் காரணமாகவும்  சளி இருமல் ஏற்படும்.

இந்த பாதிப்புகள் வராமல் தடுக்க… வெளி இடங்களில் சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை அருந்தக்கூடாது.
இந்த சீசனில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவ்வப்போது வேது பிடிப்பது (ஆவி பிடிப்பது) நல்லது.

நுரையீரல் பிரச்சினைகள்

குளிர் காற்றை சுவாசிக்கும்போது நமது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதனால், தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளுதல் வர வாய்ப்பு உண்டு. ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு போன்ற நாய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இந்த மழைக்காலங்களில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். சைனஸ் தலைவலி வரலாம்.

மெட்ராஸ்

‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண்நோய் இந்த மழை சீசனில் அதிகமாகப் பரவும். நம் கண்ணுக்குள் இருக்கும் ‘கஞ்சக்டைவா’ எனும் பகுதியை அடினோ  வைரஸ் தாக்குவதுதான் மெட்ராஜ் ஐ. இதனால் கண் சிவந்து, கண்ணீர் கசிந்துகொண்டே இருக்கும். இந்த நோய் எளிதில் மற்றவர்களுக்கும் பரவக்கூடியது. சற்றே சூடான நீரில் கண்களை (முகத்தை) கழுவுவது நல்லது. இந் நோயால் பாதிக்கப்பட்டவரை நேருக்கு பார்க்காமல் தவிர்க்க வேண்டும். இந்த நோய் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையாக இதற்கான மருந்தை போட்டுக்கொள்வதும் நோய் வராமல் தடுக்கும்.

வயிற்றுப்போக்கு

இந்த மழைக்காலத்தில் நல்ல தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் வேகமாகப் பரவுகின்றன. ஆகவே பொதுவாகவே வெளியில் உணவு உண்ணாலம் இருப்பது நல்லது. தவிர காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரைப் பருக வேண்டும்.

மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்…

மழைக்காலத்தில் முடிந்தவரை வெளி இடங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும்.

தினமும் இரண்டுமுறை வெது வெதுப்பான நீரில் குளிபப்து நல்லது. (அதிக சூடான நீரும் ஆபத்து.)

உடலை நன்றாக தேய்த்துக் குளிக்கும்போது, நம் உடல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். ஆகவே அவசரக்குளியல் போடாமல் நன்றாக குளிக்க வேண்டும்.

சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்று தலைக்குக் குளிக்கலாம். தலைக்குக் குளித்ததும் உடனடியாக நன்றாகக் காயவையுங்கள்.

ஆடையை நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, உள்ளாடைகளை தினமும் மாற்றுங்கள்.

மழை மற்றும் குளிர்காலத்தில் ஜீரண சக்தி சற்று குறைவாக இருக்கும். இதனால், காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறைக்க வேண்டும்.

காய்கறி, பழங்களை அதிக அளவில் உண்லாம். ( பழங்களை பகல் வேளையில் சாப்பிட வேண்டும்.)

கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு  முதலானவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்  செய்யும்.

சாலை ஓரங்களில் விற்கப்படும்  ஃப்ரூட் சாலட், நறுக்கப்பட்ட பழங்கள் போன்றவற்றில் கிருமித்தொற்று இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே அவற்றை தவிருங்கள்.

முடிந்தவரை அவ்வப்போது சமைத்து சாப்பிடுங்கள். சமைத்த உணவை அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விடுங்கள்.

.மழைக்காலத்தில் அதிகமாக  காபி, டீ குடிக்கத் தோன்றும். ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்தக் கூடாது.  மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் அதிகம் இருக்காது. அதனால், தண்ணீர் அருந்தாமலேயே இருப்பது தவறு. சூப், ரசம், பால், டீ, காபி  எனத் திரவ உணவுகள் மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.