மருத்துவமனைகளின் லாபவெறிக்கு மூளைச்சாவு எப்போது???????

Must read

d

மிழகத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில், 685 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெற்றதன் மூலம், 3,775 பேர் பயன் பெற்று ள்ளனர். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

-பிரதமர் மோடி…

உறுப்புதானம் பெற்றவர்கள் யார் யார் என்று மட்டும் கேட்டுப்பாருங்கள், நம் மருத்துவமனைகளின் லட்சனத்தை தெரிந்துகொள்வீர்கள்.

(ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நேர்மையாக நடந்துவருகிற ஒரு சில உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் விதிவிலக்கு…)

# உலகநாடுகளிலிருந்து பலரும் மருத்துவ சுற்றுலா என்
ற பெயரில் தமிழகத்தை நோக்கி வருவதற்கு இங்கு தாராளமாகவும் மலிவாகவும் கிடைக்கும் “உறுப்புகள்” ஒரு முக்கிய காரணம்….

இப்படி தானமாகப் பெற்ற உறுப்புகளை மருத்துவமனைகள் தானமாக யாருக்கும் பொருத்துவதில்லை..வேறு வகைகளில் செலவு கணக்கு காட்டப்பட்டு பெரும் தொகைக்கு அவை விற்கப்படுகின்றன.

ஒரு சிலர் லட்சியங்களுக்காக வழங்கும் தானமாக பெறப்பட்ட உறுப்புகள் ஒன்றும் குப்பனுக்கோ சுப்பனுக்கோ பொருத்தப்படுவதில்லை, அவை
பல லட்சங்களுக்கும் சில நேரங்களில் கோடிகளுக்கும் விலை போகிறது.

இப்பொழுதெல்லாம் முட்டியில் அடிபட்டவர்கள் கூட மூளைச்சாவு அடைகிறார்களே என்கின்ற சந்தேகம் சாதாரண மக்களுக்கும் வரத் தொடங்கிவிட்டது.

நம்மை கடந்து செல்லும் ஒவ்வொரு ஆம்புலன்ஸ் வாகனத்திலும் பாதிக்கப்பட்ட ஒருவரது உடலோடு அவரது வாழ்நாள் சேமிப்பும் சேர்த்தே எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை எப்போது உணர்வோம்.

மருத்துவமனைகளின் லாபவெறிக்கு மூளைச்சாவு எப்போது???????

 dd    – பிரிமியர் திருப்பதி https://www.facebook.com/premier.thirupathy?fref=ts

More articles

Latest article