1
உலகத்துக்கே தலைவலியாய் இருப்பவர்கள், குடிகாரர்கள். அந்த குடிகாரர்களுக்கு தலைவலியாக இருப்பது தலைவலிதான்!
குழம்புகிறதா?
முதல்நாள் மூச்சு முட்ட குடித்துவிட்டு, மறுநாள் காலை, “அய்யோ..தலை வலிக்குதே..” என்று புலம்புவதும், அதற்கு தீர்வாக, ஓரிரு பெக் மது குடிப்பதும் பெரும்பாலான குடிகாரர்களின் வழக்கம்.
மது குடிப்பதால் ஏன் தலைவலி வருகிறது என்று ஒரு ஆராய்ச்சியே நடந்திருக்கிறது.
ஆமாம்.. நியூகேஸ்டில் பல்கலைஆராய்ச்சியாளர் பேராசிரியர் கைப்ரோஸ்கைப்ரி என்வர்தான் இந்த ஆராய்ச்சியை நடத்தி இருக்கிறார்.
ஆராய்ச்சி முடிவு என்ன?
“குடிகாரர்களுக்கு சவாலகா இருக்கும் விசயம், மறுநாள் ஏற்படும் தலைவலிதான். இது குறித்து நாங்கள் ஆராய்ச்சி நடத்தினோம்.
மது குடிக்கும் போது இடையில் அதிகஅளவில் தண்ணீர் குடித்தால் மறுநாள்காலையில் தலைவலி  ஏற்படாது என்பதோ, குறைவாக மது அருந்தினால் தலைவலி வராது என்பதோ தவறு.  எப்படியாயினும் தலைவலி வந்தே தீருகிறது.
இந்தத்  தலைவலிக்கு என்ன காரணம்என இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ரசாயன கலவை மூலம்தயாரிக்கப்பட்ட ஆல்கஹாலைகுடிக்கிறோம். மறுநாள் காலை நம்உடலில் உள்ள ஆல்கஹால் முற்றிலுமாகபிரித்து எடுக்கப்படாததால் தான்தலைவலி ஏற்படுகிறது என்றே கருதுகிறோம்” என்கிறார் இவர்.
என்ஹச்எஸ் என்ற இணையதளம் தலைவலி குறித்து சில கருத்துக்களை சொல்கிறது:
“தலைவலியை தீர்ப்பதற்கு வழி இல்லை.தவிர, தலைவலியை தீர்ப்பத்றகு  மறுநாள் மறுபடி குடிப்பது என்பது தீர்வல்ல.  அதுமேலும் தலைவலியை தான் ஏற்படுத்தும்.    அதே போல, பீருடன் தக்காளி சாறுபருகுவது, கிங்ஸ்லே நிறுவனத்தில்போவ்ரில் கலவை, உப்பு கலந்த கறி சாறு,வோட்கா போன்றவைகள் தலைவலிக்குதீர்வு ஏற்படுவதாக பரிந்துரைசெய்யப்படுகிறது.  இதுவும் தவறான நம்பிக்கைகளே.
தூங்குவதற்கு முன் வலி நிவாரணமாத்திரைகள் எடுத்துக் கொள்ளவது சிறுநிவாரணமாக தான் இருக்கும்” என்கிறது இந்த இணையதளம்.
சரி, குடிப்பதால் ஏற்படும் தலைவலியிலிருந்து தப்பிக்க என்னதான் வழி?
மிக எளிய வழியைச் சொல்கிறார்கள் என்ஹச்எஸ் என்ற இணையதளம் ,மற்றும் ஆராய்ச்சியாளர் பேராசிரியர்கைப்ரோஸ் கைப்ரி.
இவர்கள் சொல்லும் எளிய வழி இதுதான்:
“குடிக்காதீர்கள்!”