மக்கள் நல கூட்டணியில் யாருக்கு எத்தனை இடம்

Must read

 மக்கள் நல கூட்டணி
மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 35 தொகுதிகளில் போட்டியிடவும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் மட்டும் போட்டியிடுவார்கள் என்றும், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வைகோ மக்கள் நலக் கூட்டணியை தொடர்ந்து வழி நடத்திச் செல்வதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மாநில செயலாளராக இருப்பவர் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் ஜி.ராம கிருஷ்ணன் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. திருமாவளவன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. மேலும் கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறவும் மற்ற மாவட்டங்களில் பரவலாக போட்டியிடவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்து உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article