plastic
சுற்றுச்சூழல் நலனுக்கு எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை

 
சுற்றுச்சூழல் நலனுக்கு எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை அழிப்பதற்காக புதிய வகை பாக்டீரியாக்களை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றைய நவநாகரிக உலகில் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் வீசப்படும்போது அவை மக்கி அழிவதில்லை. இதனால் நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதுடன் மழை நீரும் மண்ணுக்குள் இறங்க முடிவதில்லை. இதனால் நிலத்தடி நீர் சேகரிப்பிலும் பிரச்சினை உண்டாகிறது மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்து விதப்பொருட்களையும் அழிக்கும் திறன் கொண்டவை. ஆனால் பிளாஸ்டிக்கை மட்டும் மண்ணில் உள்ள பாக்டீரியாக்களால் அழிக்க முடிவதில்லை.இது சுற்றுச்சூழல் நலனுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தது.
இந்நிலையில் பிளாஸ்டிக் வகை பொருட்களை அழிப்பதற்கான புதியவகை பாக்டீரியாக்களை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவுக்கு இடோனெல்லா சக்காய்யென்சிஸ் எனப் பெயரிட்டுள்ளனர். பாலி எத்திலின் டெரிப்பத்தலேட் என்று அழைக்க்க்கூடிய PET வகை கலந்த பிளாஸ்டிக் பொருட்களை  அழிக்க இந்த பாக்டீரியாக்களால் அழிக்க முடியும்.
ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் மறுசுழற்சி மையத்தில் ஆய்வுசெய்த போது இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாக்கள் 6 வார காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை மக்கவைக்கும் தன்மை கொண்டது. இந்த வகை பாக்டீரியாக்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக் வகைப்பொருட்களை அழிக்க முடியும். இந்த ஆய்வு  ஒரு துவக்க நிலையில்தான் உள்ளது. இதுதொடர்பாக இன்னும் பல ஆய்வுகள் நட்த்தப்பட வேண்டி உள்ளது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கேயோ ஒடா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு ‘சயின்ஸ் ‘ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.