இப்போதைய தமிழக சட்டப்பேரவைக்கு அ.தி.மு.கவினரைத்தவிர வேறு யாரும் போவதே தேவையற்றது. பயனற்றது. இன்னும் ஏழெட்டு மாதங்களுக்கு அதைப் புறக்கணித்துவிட்டு வேறு அரசியல் வேலைகளை இதர கட்சிகள் பார்க்கலாம். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இப்போதைய சபாநாயகரும் சட்டப்பேரவை நிகழ்வுகளும் ஒரு களங்கமாகவே குறிக்கப்படுவார்கள். இந்த சட்டப்பேரவை முறையாக இயங்கிய காலத்தில் கூட வருடத்தில் அதிகபட்சம் 40 நாட்கள்தான் கூடுகிறது என்ற சராசரிக்கணக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏழு நாட்கள் வீதம் சபை கூடவேண்டுமென்ற கட்டாய விதியை அடுத்த ஆட்சிக்காலத்திலேனும் யாராவது கொண்டு வரவேண்டும்.

 

முகநூல் பக்கம் :https://www.facebook.com/gnani.sankaran/posts/10206372311659338?pnref=story