தைலாபுரம் தோட்டத்தில் முதல்வருக்கு சைவ விருந்து… ராமதாஸ் குடும்பத்தினரே தயாரித்து அளித்த ‘டிஷ்’

Must read

தைலாபுரம் தோட்டத்தில் முதல்வருக்கு சைவ விருந்து…

ராமதாஸ் குடும்பத்தினரே தயாரித்து அளித்த ‘டிஷ்’

அ.தி.மு.க.,பா.ம.க.கூட்டணி உருவான சில நிமிடங்களிலேயே முதல்வரின் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு அழைக்கப்பட்ட டாக்டர் ராமதாசுக்கு-சிறிய விருந்து கொடுக்கப்பட்டது.

பதிலுக்கு,டாக்டர் ராமதாஸ் , தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நேற்று மாலை தட புடல் விருந்தளித்து அசத்தி இருக்கிறார்.

‘’ஓட்டலில் இருந்து எந்த பதார்த்தத்தையும் தருவிக்க கூடாது. நமது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களையே உணவு பதார்த்தம் செய்ய பயன் படுத்த வேண்டும்’’ என்பது பெரிய அய்யாவின் ஆணை.

அதன்படியே உணவு பட்சணங்கள்  –ராமதாஸ் குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டது.முழுக்க முழுக்க சைவ உணவு.

முதல்வர் ,துணை முதல்வர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு, ராமதாசின் குடும்பத்தினரே விருந்து பரிமாறியுள்ளனர்.

இந்த விருந்தில் அன்புமணி தவிர ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க.முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

—பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article