new 1

பல்லடம்:

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 107வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை  8 மணிக்கு துவங்கியது.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாலிகுட்டை அருகே 52 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலுக்கு வெள்ளகோவில் பெரியசாமி பந்தல் என்றும், அரங்கத்துக்கு திருச்சி கண்ணையன் அரங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளன.

19தலைப்புகளில் அறிஞர்கள் பேசுகிறார்கள். மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகிறார்.  இதைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாநாட்டு உரையாற்றுகிறார்.

மாநாட்டு பந்தலுக்குள் அமரும் தொண்டர்களின் வசதிக்காக 500 மின்விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும்கண்டுகளிக்கும் வகையில் 8 இடங்களில் பிரமாண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.. இதுதவிர ஆண்கள், பெண்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர்வசதி செய்யப்பட்டுள்ளது.

new 2

மாநாட்டுக்கு வருபவர்களின் வசதிக்காக மாநாட்டு திடலுக்கு அருகில் 100 ஏக்கரில் வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்குக்கு மதிய மற்று இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் வந்திருக்கிறார்கள்.

மாநாட்டின் ஒரு பகுதியாக  “ஈழத்தில் இனப்படுகொலை” என்ற புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு   தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பே நிரந்தர தீா்வு  என்பது குறித்து மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து கட்சி கூட்டணி என்று ஏற்கெனவே மதிமுக தலைவர் வைகோ அறிவித்துவிட்ட நிலையில், வேறு முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.