ம.ந.கூ. தலைவர்கள்/ நடைபயிற்சி / ஜி.ராமகிருஷ்ணன்
ம.ந.கூ. தலைவர்கள்/ நடைபயிற்சி / ஜி.ராமகிருஷ்ணன்

 
சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு படத்தை பதிவேற்றி இருந்தார்.  மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் காலை நேரத்தில் நடை பயிற்சி செய்தபோது எடுத்த படம் அது. அதில் திருமாவளவன் தவிர்த்த மூவரும் ஒரே மாதிரி டீ சர்ட் அணிந்திருந்தார்கள். முத்தரசன் வேட்டி அணிந்திருந்தார்.
இந்த படத்தை சமூகவலைதளங்களில் பார்த்த சிலர் “திருமாவுக்கு மட்டும் ஏன் வேறு மாதிரி டி சர்ட்? முத்தரசன் மட்டும் ஏன் வேட்டி கட்டியிருக்கிறார்?” என்று கேட்க ஆரம்பித்தார்கள். அதாவது, பின்னூட்டங்களில்.
இதையெல்லாம் படித்த ஜி.ராமகிருஷ்ணன் ஆதங்கத்துடன் இன்று ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.
அதில்,” மக்கள் நல கூட்டணி தலைவர்கள் மூன்றாவது  கட்ட சுற்றுப்பயணத்தில் உள்ளோம். நடைப்பயிற்சி சென்ற புகைப்படத்தில் தோழர் திருமாவளவன் பனியன், தோழர் முத்தரசன் வேட்டி அணிந்தது பற்றி சில விமர்சனங்கள் வந்திருந்தன.
நான்கு பேருக்கும் தோழர்கள் ஒரே வண்ண பனியன்தான்  கொடுத்தார்கள்.  நாங்களும் மகிழ்ச்சியோடு அணிந்தோம். தோழர் திருமாவுக்கு பனியன் சற்று இருகப் பிடித்திருந்தது. அதனால், தன்னிடம் இருந்த வேறொரு பனியனை அணிந்துகொண்டார். இதுதான் நடந்தது” என்று விளக்கம் அளித்துள்ள ராமகிருஷ்ணன், “விமர்சிக்க எதுவுமில்லாத நிலையில் – எதையெல்லாம் விமர்சிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது” என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.