வித்யாசாகர் ராவ்
சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் பரவியுள்ல நிலையில், தமிழக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விரைந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது இந்த நிலையில் இன்று மாலை ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவர உடல் நிலையை இதயவியல், நுரையீலர் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்தது. அதிமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தார்கள்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு விரைந்து வந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
இன்னும் சிறிது நேரத்தில் அவர் மருத்துவமனை சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.