டில்லி ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Must read

12729233_10153248001117062_4805011620668125454_n
டில்லியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ம் தேதி நடந்த அப்சல் குருவின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக  பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா குமாரை போலீஸார் கைது செய்தன். அவர் மீது  தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையொட்டி பல்கலை ஆசிரியர்களும் மாணவர்களும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர்.   அப்போது மாணவர்களுக்கும் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் சிலரும் பத்திரிகையாளர்கள் நால்வரும் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலைக் கண்டித்து இந்தியா முழுவதும் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.   சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம்  ஆகிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.   எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ரவிக்குமார், ஊடகவியலாளர்கள் அன்பழகன், குமரேசன், சசிக்குமார், விஜயசங்கர், குணசேகரன், கவிதா முரளிதரன், பாரதி தமிழன், அன்பழகன், ஆய்வாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் பேசினர்.
 

More articles

Latest article