a3b8b03b-f52a-407b-935b-6559b5e70938_S_secvpf
 
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
234 தொகுதிகளுக்கும் 4362 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். புதுவை, காரைக்காலில்  உள்ள 30 தொகுதிகளுக்கு 71 பேரும் ஆக மொத்தம் 4,433 பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.
கடந்த மாதம் 22–ந்தேதி தொடங்கி அவர்களிடம் நேர்கானல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து ஆய்வு செய்யப்பட்டது. . தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் இந்த  நேர்காணலை நடத்தினார்கள்.
நேற்று மாலையுடன் தி.மு.க. நேர்காணல் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கு மட்டும் நேர்காணலை நடத்தி முடிக்காததால் இன்று காலை ஆறு தொகுதிக்கும் நேர்காணல் நடந்தது.
கொளத்தூர் தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் பெயரில் மட்டுமே விருப்ப மனுவாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேறுயாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் கொளத்தூர் தொகுதி நேர்காணலுக்கு மு.க.ஸ்டாலின் மட்டும் அழைக்கப்பட்டார். அவரிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி சிரித்துக்கொண்டே  கேள்விகளை கேட்டார். அதற்கு மு.க. ஸ்டாலினும் சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.
இதையடுத்து மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் நேர்காணல் நடந்தது.