saudi2.jpg quality=100&strip=all&w=664&h=441&crop=1
ரியாத்:
இஸ்லாமியத்தில் செஸ் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது என சவுதி முஸ்லிம் தலைவர் அறிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் முஸ்லிம் மத தலைவர் (கிராண்ட் முஃப்தி)  தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது:
செஸ் விளையாட்டு ஒரு சூதாட்டம். அதோடு நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் செயல். இது  விளையாட்டு வீரர்களுக்கு இடையே வெறுப்பையும், விரோதத்தையும் உருவாக்குகிறது. குரானில் போதை, சூதாட்டம், உருவ வழிபாடு, கணிப்பு ஆகியவை கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் ஈராக் ஷியா முஸ்லிம் மத தலைவர் அததோலா அலி, செஸ் விளையாட்டை தடை செய்துள்ளார். இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு 1979ம் ஆண்டு ஈரானில் பொது இடங்களில் செஸ் விளையாடுவது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்டு, அந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் 1988ம் ஆண்டு ஈரான் முஸ்லிம மத தலைவர் ருஹொல்லா கொமேனி இந்த தடையை விலக்கி, செஸ் சூதாட்டம் இல்லை என்று அறிவித்தார். இதையடுத்து தற்போது சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கு தங்களது நாட்டு விளையாட்டு வீரர்களை ஈரான் அனுப்பி வைத்து வருகிறது.
முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் ‘‘செஸ் ஒரு திறன் சார்ந்த விளையாட்டு. இது ஒரு மனிதனின் 5 முறை இறை வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தாது. அதோடு, இதில் சூதாட்டம் நடப்பதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது’’ என்ற கருத்து நிலவுகிறது.
இங்கிலாந்து செஸ் கிராண்ட் மாஸ்டர் நிஹேல் சார்ட் கூறுகையில், ‘‘ சவுதியில் செஸ் விளையாட்டு தடை விதிப்பது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஸ் சமுதாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. செஸ் நம்மிடம் வக்கிரமிக்க ஒழுக்க கேட்டை ஏற்படுத்தாது’’ என்றார்.