கொலை செய்யப்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரியின் மனைவி மருத்துவமனையில் மரணம்

Must read

mann
உ.பி.யில் சுட்டுக்கொல்லப்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரியின் மனைவி சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் சகஸ்பூர் கிராமத்தில் வசித்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரியான தன்சில் அகமது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கடந்த 3-ம் தேதி திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபர்கள் திடீரென மறித்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் தன்சில் அகமது சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அவரது மனைவி பர்சானா படுகாயங்களுடன் மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். குழந்தைகள் காயமின்றி தப்பினர். இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தன்சில் அமகதுவின் மனைவி பர்சானா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக அவரது உறவினர்களான ரேஹான், ஜைனுல் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

More articles

Latest article