k11

நாயகியின் கவனம் தன் குடும்பத்தின் மீதும், கணவர் மீதும் சொந்த

வேலைகளிலும் கவனம் செல்ல அவ்வப்போது call அவ்வளவு தான். கணவருக்கு

ஆப்ரேசன் செய்ய வேண்டி இருந்ததால் கூடுதல் சுமை காரணமாக எதையும்

யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. ஆறுதல் வார்த்தைகளால் நாயகன் மேல்

நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஆனால் அவை வெறும் வார்த்தைகள் மட்டுமே.

சிவா விஷயம் கேள்வி பட்டு பேசுகிறார்.

என்ன மா என்னாச்சு ?

ஒன்னு இல்ல சிவா

சொல்லு ஏன் மறைக்கிற

விஷயத்தை சொல்ல

எப்போ ஆப்ரேசன் ?

நாளைக்கு

ஆபிஸ்ல லீவ் இல்ல பார்க்கிறேன் முடிந்தால் வர்றேன்.

ம்… வேலைய பாரு சிவா ஒன்னும் பிரச்சனையில.

என்ன தான் தைரியசாலியாக இருந்தாலும் தனியாக ஆப்ரேசன் தியேட்டர்

வாசலில் காத்திருப்பது கொடுமையே. சற்றும் எதிர் பாராமல் சிவாவின் வருகை

ஆச்சரியப்படுத்துகிறது.

லீவ் இல்லன்னு சொன்ன !

இல்ல தா லாஸ் அப் பே ல வந்தேன்.

எதுக்கு போன் பண்ணியிருக்கலாமே.

எனக்கு தெரியும் என் wife உடம்பு சரியில்ல தப்போ எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு.

அதுலயும் நீ பொண்ணு அதான் மா.

Thankx சிவா.

சில மணி நேரங்கள் நடந்த ஆப்ரேசன்ல சிவாவின் வருகை பெரிய ஆறுதலாய்

அமைந்தது. ஸ்ரீ & நாயகன் போன்ற best frds வார்த்தைகளால் மட்டும் வடை

சுடாமல் வந்த சிவாவை என்ன சொல்ல இப்படியும் சில மனிதர்கள். ஆப்ரேசன்

முடியும் வரை உடன் இருந்த சிவாவுக்கு கண் முழிக்கும் வரை காத்திருக்க

முடியவில்லை.

முழிச்சதும் பேசிட்டு போகலன்னு இருந்தேன்.

மயக்க மருந்து கொடுத்திருப்பாங்கள.

ஆமா மா சரி விடு இன்னொரு நாள் பேசிக்கிறேன். எப்படியோ ஆப்ரேசன் நல்ல

படியா முடிந்ததே. அவரை பார்த்துக்கோ சரி மா நான் கெளம்புறேன் மணியாகுது.

சரி சிவா thanks.

எதுக்கு thanks வர்றேன் சரியா.

அலங்காரமான வார்த்தைகள் இல்ல ஆனால் ஆத்மார்த்தமான உணர்வு மட்டுமே

இருந்தது. நாயகி busy யாக,ஸ்ரீ க்கு பொழுது போக்கே நாயகன் டைம்லைனை

நோண்டுவது தான் என்றாகிறது. அவ்வளவு இம்ப்ரஸ் ஆகியிருந்தாள். நாயகனின்

காதலி யார் என்ற தான் ஆராய்ச்சி. சுதா என்று மட்டுமே தெரியும். ஆகையால்

அந்த பேர் சம்மந்தமான எல்லா பேர்களும் ஆராய்ச்சி செய்ய தொடங்கினாள். சில

விசயங்களை நாயகியிடம் சொல்கிறாள்.

தேவையில்லாத வேல இது.

ஏ… இல்ல இந்த மூஞ்சி எல்லாம் போய்…

ஸ்ரீ இது அவனோட சொந்த விஷயம் வேண்டா நம்ம லிமிட் ன்னு ஒன்னு இருக்கு.

நிறைய நேரங்களில் ஸ்ரீ ஓவர் உரிமை எடுத்துகொள்வது தவறு என்று கண்டிப்பது

உண்டு. சில சந்திப்புகளில் நாயகனின் செல் லை புடுங்கி நோண்டுவது. பர்சை

எடுத்து ஆராய்ச்சி செய்வது. அப்போதெல்லாம் நாயகி கண்டிக்கிறாள்.

ஸ்ரீ இது தப்பு எல்லாருக்கும் பர்சனல் ன்னு இருக்கும்.

Oye நம்ம frd தான…

இருக்கலாம் ஆனா ஒரு ஆணோட பர்ஸ் எல்லா பார்க்கும் உரிமை இல்ல

நமக்கில்ல

Loosu அதுவே ஒன்னும் சொல்லல உனக்கென்ன

இதற்கு மேல் பேசி புண்ணியம் இல்லை என அமைதியாகிறாள். இதற்கு

இடையில் ஸ்ரீ யின் உறவுகார பெண்மணி நாயகனின் நட்பில் இணைந்திருந்து

வயதுக்கு ஒவ்வாத காரியத்தை செய்கிறாள். பேரன் பேத்தி எடுத்த பெண்மணியின்

செயல்கள் முகம் சுளிக்க வைக்கிறது பல நேரங்களில், பலரையும். தவறு

செய்வதில் ஆணும், பெண்ணும் சளைத்தவர்கள் அல்ல. பெண்ணுக்கு பெண்தான்

எதிரி.சில கேவலமான பெண்களும் அவர்கள் செய்யும் நம்பிக்கை துரோகமும்

அதனால் நாயகிக்கு ஏற்படும் பாதிப்பும் அடுத்தடுத்த பாகங்களில்