கபாலிய நல்லா கொடுத்தா போதும் தலைவா!

Must read

 

Kollywood-news-13912

“வாழ வச்ச தமிழ்நாட்டுக்கு எதாவது பண்ணனும்னு அடிக்கடி சூப்பர் ஸ்டார் சொல்வதே வேணாம் என்பது என் கருத்து!

இந்த அரசியல் பார்வையெல்லாம் வருவதற்கு முன்னரே சின்ன வயசில, திரையில பார்த்து துள்ளி சந்தோஷ பட்டது, ரஜினி ஸ்டைல்ன்னு சொல்லிகிட்டது, எங்களை குதுகல படுத்தியதுன்னு நீங்க நிறையவே பண்ணிடிங்க, ஒரு கலைஞனா அதை தான் பண்ண முடியும், தவிர ரஜினி என்கிற தனி மனிதனை முன்னேற்ற வேண்டுமென டார்கட் பிக்ஸ் பண்ணிக்கிட்டு எல்லாம் உங்களை நாங்க வாழ வைக்கலை, அவ்ளோ நல்லவங்களும் நாங்க இல்லை, உங்கள் திறமைக்கான விலை அது! அதனால் தான் நாடு கடந்து தமிழரல்லாத நாடுகளில் கூட ஜெயிக்க முடிந்தது! உங்களை உருவாக்கியது நாங்க தன்னா, எங்க இன்னொரு ரஜினியை உருவாக்க முடியுமா என்ன! அது நிகழ்ந்தது!

அதனால தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது பண்ணும்னா, தளபதி மாதிரி இன்னொரு படம் தா தலைவா, கபாலியை செம்மையா கொடுங்க போறும்’

ஒரு கலைஞனாக அந்த நிவர்த்தி போறும், இந்த நாட்டு பிரஜையாக செய்வதெல்லாம் உங்கள் தனி விருப்பம்!

Vijayabhaskaran Karunanithi

More articles

Latest article