ஓரிரு நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Must read

1
 
சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக, தான் போட்டியிடும்  173 தொகுதி  வேட்பாளர்களை வெளியிட்டுவிட்டது.  இதேபோல் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து  தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
ஆனால் திமுக அணியில் 41 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.  அக் கட்சியில் நிலவும்  கோஷ்டி பூசல் காரணமாக வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “இன்னும் ஓரிருநாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நடிகை குஷ்பு  தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. அவருக்காக சில தொகுதிகளில் விருப்ப மனு அளிக்கப்பட்டிருக்கிறது.  நாங்களோ வேட்பாளர்களின் வெற்றிக்கு குஷ்பு   பிரச்சாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.

More articles

Latest article