இன்று 8-வது எலும்புக்கூடு!

Must read

sahayam-ayvu

மதுரை:

துரையில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் நரபலி கொடுத்ததாக கூறப்படும் பகுதியில் இருந்து இன்று மேலும் ஒரு எலும்புக் கூடு சிக்கியது. இந்த பகுதியில் கிடைத்த எட்டாவது எலும்புக்கூடு இது.

மதுரை அருகே பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் தாங்கள் புதிய கிராணைட் குவாரி வெட்ட ஆரம்பிக்கும்போதும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பிடித்து வந்து நரபலி கொடுப்பார்கள் என்று அவர்களது நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியான் என்பவர் புகார் கூறியிருந்தார். இதையடுத்து அவர் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டும்படி  ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உத்தரவிட்டார்.

அதன்படி மேலூர் அருகே உள்ள மலம்பட்டி என்ற இடத்தில் சேவற்கொடியான் அடையாளம் காட்டிய இடத்தில் சகாயம் முன்னிலையில் அதிகாரிகள் தோண்டி வருகிறார்கள்.  முதலில் ஒரு நாள் மட்டும் 6 உடல்களின் எலும்புக் கூடுகள் கிடைத்தன.  இதையடுத்து அந்த இடத்தில் மேலும் 10 அடி வரை தோண்டுமாறு சகாயம் உத்தரவிட்டார்.

இதில் மேலும் ஒரு எலும்புக் கூடு நேற்று கிடைத்தது. இந்த நிலையில் இன்று இன்னொரு எலும்புக் கூடு சிக்கியது.

தோண்டுதலில்  கிடைத்த எலும்புக் கூடுகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்த வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article