சரோஜா தேவி
சரோஜாதேவி பிறந்தநாள்
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான சரோஜாதேவி  பிறந்தநாள் இன்று. கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், சுமார்  ஐம்பதாண்டு காலமாக இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி”  என்றெல்லாம் புகழப்பட்ட இவர்,  பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஹென்னப்ப பாகவதர் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப்படத்தில் 1955ம் ஆண்டு  கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படம்  தேசிய விருதும்  பெற்றது. கன்னடப் படத்தில், எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக அறிமுகமாகிப் தமிழில் அவருக்கு பெரும் புகழைத்தேடித் தந்த படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன்.
பிறகு ஸ்ரீதரின் ‘கல்யாணப் பரிசு’ 1959 படத்தில் நடித்து, நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர். அந்தக்கால ‘சூப்பர் ஸ்டார்’களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்பாரும் உண்டு.
அன்றைய கல்லூரி மாணவிகள், இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைப் பின்பற்றித் தங்களை அலங்கரித்துக்கொண்டார்கள்.
 
பாக்யராஜ்
பாக்யராஜ் பிறந்தநாள்
தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் 1951ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார்  . இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, ’16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பணியாற்றியவர். அவறறில் சிறு சிறு வேடங்களிலும் தோன்றினார்.  பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவும் அறிமுகம் ஆனார்.
இவர் இயக்கிய முதல் படம்  ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’. இது பெரும் வெற்றி பெற்றது.   அடுத்து, சொந்த தயாரிப்பான ‘ஒரு கை ஓசை’ யும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை அளித்தவர். பாலுணர்வு காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்று இவரது படங்களைப்பற்றி விமர்னசனம் உண்டு.
அதே நேரம் திரைக்கதை அமைப்பதில் நிபுணர் என்று பெயர் பெற்றவர்.
 
பிபாசா பாசு
பிபாசா பாசு  பிறந்தநாள்
பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு 1979ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார்.  விஜய்க்கு ஜோடியாக, சச்சின் என்ற தமிழ்த் திரைப்படத்திலும் நடித்தார். இவரது நிர்வாண வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
index
அமெரிக்காவின் முதல் தேர்தல் நடந்த நாள்
தற்போது ஐக்கிய அமெரிக்கா என அறியப்படும் நிலப்பகுதிகளில் ஐரோப்பிய குடியேற்றவாதிகள் வருவதற்கு முன்னரே, அந்த மண்ணைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள்  வாழ்ந்து வந்தனர். 1600க்குப் பிறகு ஐரோப்பிய குடியேற்றங்கள் உருவாகத் தொடங்கின.  1770களில் பதின்மூன்று பிரித்தானியக் குடியேற்றங்களில் இரண்டரை மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர். இவர்கள் வளமாகவும் தங்களுக்கான தனிப்பட்ட அரசியல் மற்றும் சட்டங்களையும் கொண்டிருந்தனர். இங்கிலாந்து  நாடாளுமன்றம் இந்தக் குடியேற்றங்கள் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்டி புதிய வரிகளை விதித்தது. இதை இந்த மக்கள் (இங்கிலாந்து மக்களாக இருந்து, அமெரிக்க மக்களாக மாறியவர்கள்) எதிர்த்தார்கள்.
சிறுசிறு கிளர்ச்சிகள் பெரிதாகி ஏப்ரல் 1775இல் முழுமையானப் போராக உருவானது. ஜூலை 4, 1776இல் இக்குடியேற்றங்கள் தங்களை பெரிய பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்ற தனிநாடாக அறிவித்தன; தாமஸ் ஜெஃவ்வர்சன் இயற்றிய அரசியலைப்புச் சட்டத்தின்படி அமெரிக்க ஐக்கிய அரசு உருவானது.
1789இல் புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது; இதுவே ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுக்கான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் வெள்ளையர்கள் மட்டும்.. அதுவும் சொத்துக்கள் உள்ளவர்கள் மட்டும் ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஜார்ஜ் வாஜிங்டன் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.