ஆஸ்திரேலிய கோர்ட் அதிரடி தீர்ப்பு: அகதிகளுக்கு சிக்கல்!

Must read

 
140703181619_australia_boat_refugees_640x360_afp
“ஆஸ்திரேலியாவில் அகதித்தஞ்சம் கோரி வருபவர்களை நாட்டின் பெருநிலப் பரப்புக்கு வெளியே தடுத்து வைத்து, அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது”  என்று  ஆஸி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகும் அகதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா பெரும் தீவு. அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு அருகிலேயே நிறைய தீவுகள் உள்ளன.
உள் நாட்டுப்போர் உட்பட சில காரணங்களுக்காக பல நாடுகளில் இருந்தும் ஆஸ்திரேலிய நாட்டுக்கு தஞ்சம் புகுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  உரிய அனுமதி இல்லாமல், சிறு படகுகளில் வரும் அகதிகள் பல சமயங்களில் விபத்து காரணமாக பலியாவதும் நடக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா வரும் அகதிகளை, நாட்டுக்கு வெளியே தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன்படி, தனது அதிகாரத்தில் உள்ள சிறு தீவுகளில் அவர்களை அடைத்து வைத்து விசாரிக்கிறது.
அப்படி, நவ்ரூ மற்றும் மனூஸ் ஆகிய சிறு தீவுகளில்  அடைத்து வைக்கப்பட்ட அகதிகளில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு காரணங்களால் ஆஸ்திரேலிய பெரு நில பரப்புக்கு வந்தார்கள். தங்களை அந்த பெருநில பரப்பிலேயே கொண்டு செல்லப்பட்ட 200க்கும் அதிகமானவர்கள் பல்வேறு காரணங்களுக்கு ஆஸி பெருநிலப்பரப்புக்கு வந்தனர் அல்லது கொண்டுவரப்பட்டனர்.
அவர்கள் தாங்கள் தொடர்ந்து பெருநிலபரப்பில் தங்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதன் விசாரணை முடிந்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\
அதில், “அவர்களை மீண்டும் நவ்ரூ மற்றும் மனூஸ் தீவுகளுக்கு திருப்பி அனுப்ப அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறியுள்ளனர்.
இந்த தீர்ப்பினால், ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடிச் செல்லும் அகதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

More articles

Latest article