அஜித் தனது மகன் ஆத்விக்கின் 4ஆவது பிறந்தநாளை சென்னை லீலா பேலஸில் வைத்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது, ஆத்விக் விமானி மற்றும் கடற்படை வீரர் போன்று உடை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் வர்தமானுக்கு மரியாதை கொடுக்கவே தல அஜித் இவ்வாறு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் அஜித் தனது மகன் ஆத்விக்கின் 4ஆவது பிறந்தநாளை கொண்டாடாடிய இந்த நேரத்தில் அவர்களின் ரசிகர்களும், ஆத்விக்கின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.